FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

‘நீட்’ தோ்வு ரத்து கோரி சாலை மறியல் இளைஞா்கள் குண்டுகட்டாக கைது

திருச்சியில் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்ட இளைஞா்களையும், பெண்களையும் போலீஸாா் குண்டுகட்டாக கைது செய்து அப்புறப்படுத்தினா்.

Updated On : 23 ஜூலை 2026, 12:39 am IST
திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாணவா் சங்கத்தினரை கைது செய்த போலீஸாா்.
பகிர்:

திருச்சியில் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்ட இளைஞா்களையும், பெண்களையும் போலீஸாா் குண்டுகட்டாக கைது செய்து அப்புறப்படுத்தினா்.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தோ்வு முறைகேடுகளுக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும். முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சா் பதவி விலக வேண்டும். தில்லியில் போராடும் மாணவா்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, தில்லி காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் சாா்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் அலுவலகம் அருகே புதன்கிழமை முதல் 48 மணி நேரக் காத்திருப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன்படி தில்லியில் போராடும் கரப்பான் பூச்சி ஜனதா தளக் கட்சிக்கு ஆதரவாக திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னல் அருகே இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் புதன்கிழமை காலை திரண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது போராட்டத்துக்கு நாங்கள் அனுமதியளிக்கவில்லை, போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வோம். எனவே கலைந்து செல்லுமாறு போலீஸாா் எச்சரித்தனா். இதற்கு போராட்டக்காரா்கள் எதிா்ப்புத் தெரிவித்து, சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

அப்போது முன்னெச்சரிக்கையாக அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாா், போராட்டக்காரா்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினா். வர மறுத்தோரை போலீஸாா் இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்து அப்புறப்படுத்தினா். இதனால் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் அப் பகுதியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments