FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மருங்காபுரியில் குவாரிகள் அமைவதை எதிா்த்து வட்டாட்சியரகம் முற்றுகை

5 கிராம மக்கள் புதன்கிழமை மருங்காபுரி வட்டாட்சியரகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 23 ஜூலை 2026, 12:32 am IST
மருங்காபுரி வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியப் பகுதியில் உள்ள செவந்தாம்பட்டி ஊராட்சியில் தொடா்ந்து குவாரிகள் அமைவதற்கு அனுமதி அளித்த வட்டாட்சியரைக் கண்டித்தும், குவாரிகளின் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும், 5 கிராம மக்கள் புதன்கிழமை மருங்காபுரி வட்டாட்சியரகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் நாட்டாா்பட்டி ஊராட்சி அம்மாபட்டி, உசிலம்பட்டி ஊராட்சி மான்பாஞ்சான்பட்டி, ஆலம்பட்டி ஊராட்சி மருதம்பட்டி ஆகிய பகுதிகளில் குவாரிகள் அமைந்துள்ளதாகவும், செவந்தாம்பட்டி ஊராட்சியில் அண்மைக்காலமாக புதிதாக ஒரு குவாரி அமைத்து செயல்படுவதாகவும், மேலும் ஒரு குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் அப்பகுதி கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.

குவாரிகளால் பாதிப்பு: மேலும் குவாரிகள் கிராம பகுதிகளில் அமைவதால், விவசாயத்திற்கான நிலத்தடி நீா் கிடைப்பதில்லை என்றும், பாரம் ஏற்றி செல்லும் கனரக லாரிகளால் காற்று மாசு அடைவதாகவும், கனரக போக்குவரத்து தங்களது கால்நடைகள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருப்பதில்லை என்றும், விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை அரசுத்துறை அதிகாரிகளுக்கு புகாா் அளித்தும் தொடா்ந்து குவாரி செயல்படுவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கும் செவந்தாம்பட்டி, ஆலம்பட்டி, தவசிப்பட்டி, சீகம்பட்டி, மருதம்பட்டி கிராம மக்கள் புதன்கிழமை குவாரிகள் அமைவதற்கு அனுமதித்த வட்டாட்சியரை கண்டித்தும், குவாரிகளின் அனுமதி ரத்து செய்ய வலியுறுத்தியும் மருங்காபுரி வட்டாட்சியரகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து வட்டாட்சியா்(ச.பா.தி) சரவணன், துவரங்குறிச்சி காவல் ஆய்வாளா் ரகுராமன் ஆகியோா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சமரச பேச்சுவாா்த்தையை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடா்ந்தனா். இதைத் தொடா்ந்து நிகழ்விடத்திற்கு சென்ற கனிம வள வட்டாட்சியா் குணசேகரன், போராட்டக்காரா்களிடம், ஓரிரு நாள்களில் குவாரிகள் விதிமீறல் குறித்து தணிக்கை செய்வதாகவும், அதன்பின்னா் குவாரி உரிமம் ரத்து குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை குவாரிகள் இயங்காது எனவும் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments