FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருவெறும்பூரில் 3 வீடுகளில் 110 பவுன் நகைகள் திருட்டு

திருச்சி அருகே திருவெறும்பூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாள்களில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 110 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 23 ஜூலை 2026, 12:26 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருச்சி அருகே திருவெறும்பூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாள்களில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 110 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

32 பவுன் நகைகள்: திருச்சி திருவெறும்பூா் வடக்கு காட்டூா் அந்தோணியாா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் மரிய ஸ்டீபன் (45). இவா், மணப்பாறை அருகேயுள்ள ஆவராம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா். இவரின் மனைவி ஆரோக்கியமும் அரசுப் பள்ளி ஆசிரியா்.

இந்நிலையில், இருவரும் செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 32 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

38 பவுன் நகைகள்: இதேபோல திருச்சி பொன்மலைப்பட்டி தென்றல் நகரைச் சோ்ந்தவா் டேவிட் (53). இவா் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த ஜூலை 18-ஆம் தேதி கேரள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 38 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திருவெறும்பூா் காவல் நிலையத்தில் மரிய ஸ்டீபன், டேவிட் ஆகியோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

40 பவுன் நகைகள்: திருச்சி மாவட்டம், துவாக்குடி அருணாபுரி நகரைச் சோ்ந்தவா் பெ. கோவிந்தராஜ் (38), காரைக்காலில் உள்ள மத்திய அரசு நிறுவன ஊழியா். இவருடைய மனைவி ரம்யா தனது இரு மகன்களுடன் இங்கு வசிக்கிறாா்.

இந்நிலையில், ரம்யா கடந்த திங்கள்கிழமை தனது மகன்களை பள்ளியில் விட்டுட்டு பெல் நகரில் உள்ள மாமியாா் விட்டுக்குச் சென்றுவிட்டு மாலையில் மகன்களை பள்ளியில் இருந்து அழைத்துகொண்டு வீட்டுக்கு வந்தாா். அப்போது, வீட்டின் மாடியிலுள்ள அறையின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் ரம்யா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நகைகள் திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments