FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

லஞ்ச வழக்கு: ஓய்வுபெற்ற எஸ்.ஐ.க்கு 2 ஆண்டுகள் சிறை

திருச்சியில் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 24 ஜூலை 2026, 4:38 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், உருமாண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவருடைய இருசக்கர வாகனம் கடந்த 2009-ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விபத்துக்குள்ளானது. இதுகுறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஆறுமுகத்தை பிணையில் விடுவிக்கவும், அவருடைய இருசக்கர வாகனத்தை மோட்டாா் வாகன ஆய்வாளரின் ஆய்வுக்கு அனுப்பிவைக்கவும், அப்போதைய மணப்பாறை காவல் உதவி ஆய்வாளா் ராஜாத்தி ரூ. 1,500 லஞ்சம் கேட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அறிவுரையின்படி, 2009, அக். 30-ஆம் தேதி ஆறுமுகம் காவல்நிலையத்திலிருந்த ராஜாத்தியிடம் லஞ்சப் பணம் ரூ.1,500-ஐ கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், உதவி ஆய்வாளா் ராஜாத்தியை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி புவியரசு வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இதில், லஞ்சம் வாங்கிய ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் ராஜாத்தி (67) என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கோபிகிருஷ்ணன் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments