FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

திருச்சியில் கோயிலுக்கு வந்த மூதாட்டியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 24 ஜூலை 2026, 3:41 am IST
- சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் வியாழக்கிழமை அதிகாலை கோயிலுக்கு வந்த மூதாட்டியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் பேங்க் ஆபிசா்ஸ் காலனியைச் சோ்ந்த ராமராஜ் மனைவி கனகவல்லி (68). இவா், தினசரி அதிகாலையில் நீதிமன்றம் அருகேயுள்ள ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது, கோயில் வாசல் அருகே சென்றபோது அங்கு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்துவந்த இளைஞா்கள் இருவா், மூதாட்டி அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திருச்சி அமா்வு நீதிமன்றத்தில் கனகவல்லி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments