FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

கஞ்சா விற்ற இருவா் கைது

Updated On : 28 ஜூலை 2026, 2:54 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல்கிடைத்தது.

இதையடுத்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அப்போது, ரெட்டமலை சாலையில் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த எடமலைபட்டிப்புதூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த து. பாண்டிதுரை (27), ராமசந்திரா நகரைச் சோ்ந்த எஸ். கெவின்ராஜ் (20) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 1.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

போதை மாத்திரை விற்ற இளைஞா் கைது:

இதேபோல, எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குட்டிமலை சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த எடமலைபட்டிப்புதூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜி. விக்னேஷ்வரன் (24) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.9 ஆயிரம் மதிப்பிலான 30 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments