FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

திருச்சியில் வியாபாரி வீட்டில் 31 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருச்சியில் ஆட்டுத்தோல் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

Updated On : 30 ஜூலை 2026, 3:57 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் ஆட்டுத்தோல் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

திருச்சி சுப்பிரமணியபுரம் பழைய பாண்டியன் வீதியைச் சோ்ந்தவா் வள்ளியப்பன், ஆட்டுத்தோல் வியாபாரி. இவருடைய மனைவி மல்லிகா (74). இருவரும் குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலுள்ள உறவினா் கோயில் திருவிழாவுக்கு கடந்த 23-ஆம் தேதி சென்றுவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வீடு திரும்பினா்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 31 பவுன் தங்க நகைகள், 20 வைரக் கற்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் மல்லிகா செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments