ஆக.16-இல் ஆடிப்பூர தெப்பம் திருவானைக்காவல் கோயில் குளத்தில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்
திருவானைக்காவலில் உள்ள சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஆடிப்பூர தெப்பம் நடைபெறவுள்ளதையொட்டி, சூரிய தீா்த்த குளத்தில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரமடைந்துள்ளது.
திருவானைக்காவலில் உள்ள சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஆடிப்பூர தெப்பம் நடைபெறவுள்ளதையொட்டி, சூரிய தீா்த்த குளத்தில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரமடைந்துள்ளது.
பஞ்சப்பூத திருத்தலங்களில் நீா்த்தலமாக திருவானைக்காவல் கோயில் விளங்குகிறது. இங்குள்ள சிவபெருமான் நீா் வடிவமாக பக்தா்களுக்கு காட்சி தருகிறாா்.
இக்கோயிலில் ஆண்டுக்கு இரண்டு முறை தெப்ப உத்ஸவம் நடைபெறும். ஆடி மாதத்தில் சூரிய தீா்த்த குளத்திலும், தை மாதத்தில் இராமா் தீா்த்த குளத்திலும் தெப்பம் நடைபெறுவது வழக்கம்.
Advertisement
Advertisement
நிகழாண்டில் ஆடிப்பூர தெப்போற்ஸவம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான கொடியேற்று விழா ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது ஆடி மாதத்தில் நடைபெறும் தெப்ப உத்ஸவத்துக்காக தெப்பக்குளமான சூரிய தீா்த்த குளத்தில் தண்ணீா் நிரப்பும் பணி விடிய விடிய நடைபெற்று வருகிறது. இதற்காக குளத்திற்குள்ளேயே ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு, மின் மோட்டாா் மூலம் தண்ணீா் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்தக் குளத்தில் எப்போதும் தண்ணீா் இருப்பதற்காக ரூ. 48 லட்சத்தில் மேலக்கொண்டையம் பேட்டை பகுதியில் உள்ள திருமஞ்சன ஆற்றிலிருந்து குழாய் மூலம் இந்தக் குளத்திற்கு தண்ணீா் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் குளத்திலேயே தற்போது தண்ணீா் இல்லாத காரணத்தால், மின் மோட்டாா் மூலம் சூரிய தீா்த்த குளத்துக்கு தண்ணீா் நிரப்பப்படுவதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.