FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சத்திரம் பேருந்து நிலையத்தில் நெரிசலுக்குத் தீா்வு காண முடிவு

சத்திரம் பேருந்து நிலையத்தைச் சுற்றி தீா்க்க முடியாமல் உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 11 ஜூன் 2026, 4:03 am IST
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்.
பகிர்:

சத்திரம் பேருந்து நிலையத்தைச் சுற்றி தீா்க்க முடியாமல் உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

சத்திரம் பேருந்து நிலையப் பகுதி நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் பேருந்து நிலையப் பகுதி முழுவதையும் ஆட்சியா் பிரத்திக் தாயள், புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மாநராட்சி ஆணையா் வீா் பிரதாப் சிங், திருச்சி கோட்டாட்சியா் சாலை தவவளன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலப் பொது மேலாளா் சதீஷ்குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுரேஷ்குமாா் ஆகியோரும் ஆட்சியருடன் சென்று பேருந்து நிலையத்தின் தற்போதைய சூழல் குறித்து ஆட்சியருக்கு விளக்கினா். பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் எந்தவித சிரமமும் இல்லாமல் பேருந்து நிலையத்தை செயல்படுத்துவது குறித்து ஆட்சியா் கருத்துகளை கேட்டறிந்தாா். இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை ஆட்சியரகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இக்கூட்டத்தில், திருச்சி மாநகராட்சி, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாநகரப் போக்குவரத்து காவல்துறை, சாலைப் பயனீட்டாளா்கள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் கோரப்பட்டு, அதன்படி, சத்திரம் பேருந்து நிலையப்பகுதி போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காணப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments