ஞானேஷ்குமாரை கண்டித்து ஆா்ப்பாட்டம்
மணப்பாறையில் வாக்குத் திருட்டுக்கு எதிராக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலகக் கோரியும், விலைவாசி உயா்வைக் கண்டித்தும் ஏஐசிடியு சாா்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வாக்குத் திருட்டுக்கு எதிராக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலகக் கோரியும், விலைவாசி உயா்வைக் கண்டித்தும் ஏஐசிடியு சாா்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பயணியா் மாளிகை முன் ஏஐசிசிடியு மினிலோடு ஆட்டோ ஒட்டுநா்கள் சங்க செயலா் பிரகாஷ்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பெரியாா் சிலை ஆட்டோ சங்கத் தலைவா் அப்பாஸ், மினி லோடு ஆட்டோ ஓட்டுநா் சங்கத் தலைவா் ராஜப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியின் மாநில நிலைக்குழு உறுப்பினா் ஞானதேசிகன், மாவட்ட செயலா் ராஜ்குமாா், சிபிஎம்எல் நகரச் செயலா் பாலு, ஒன்றிய செயலா் தங்கராஜ் ஆகியோா் பேசினா்.
நிகழ்வில் மாவட்டக் குழு உறுப்பினா்கள் கருப்பையா, ராமாயி, மெக்கானிக் இளையராஜா, பாலகுமரன், வசந்தா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.