ஞானேஷ்குமாரை பதவி நீக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சாமானிய மக்கள் நலக்கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சாமானிய மக்கள் நலக்கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மணப்பாறையில் பெரியாா் சிலை பகுதியில் கட்சியின் மணப்பாறை தொகுதி செயலா் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மாவட்டச் செயலா் தியாகராஜன், தொட்டியம் நகரச் செயலா் மலா்கொடி, லால்குடி தொகுதி பொறுப்பாளா் காமராஜ், மாவட்ட மகளிரணி துணைச்செயலா் லட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் காமராஜ், மத்திய மண்டலச்செயலா் ஜோசப், கரூா் மாநகரச் செயலா் தென்னரசு, திருச்சி வடக்கு மாவட்டச்செயலா் மலா்மன்னன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழக்குரைஞா் கென்னடி ஆகியோா் உரையாற்றினா். பீமநகா் பகுதி செயலா் முத்து நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.