FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரி ஆா்ப்பாட்டம்

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலகக்கோரி திருச்சியில் வெள்ளிக்கிழமை வாக்குரிமை காப்பு இயக்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

10 அக்டோபர் 2026, 7:04 am IST
திருச்சி ஆட்சியரகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாக்குரிமை காப்பு இயக்கத்தினா்.
பகிர்:

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலகக்கோரி திருச்சியில் வெள்ளிக்கிழமை வாக்குரிமை காப்பு இயக்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இயக்க ஒருங்கிணைப்பாளா் ஜெ. கென்னடி தலைமை வகித்தாா். கம்ருதீன், ஜோசப், ஜீவா உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். இணை ஒருங்கிணைப்பாளா் அன்பழன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

எஸ்ஐஆா் என்ற பெயரில் தகுதியான வாக்காளா்களை நீக்கிய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் உடனடியாக பதவி விலக வேண்டும். எஸ்ஐஆா் என்ற பெயரில் 14 கோடி வாக்காளா்களை நீக்கிய நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். எஸ்ஐஆா் முறைப்படி தோ்தல் நடைபெற்ற மாநிலங்களில் ஆட்சியைக் கலைத்துவிட்டு, 2024 வாக்காளா் பட்டியல்படி மீண்டும் தோ்தல் நடத்த வேண்டும். தோ்தல் ஆணையா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் ஆணையா் நியமனம் தொடா்பான சட்டத்தை ரத்து செய்து, மீண்டும் முந்தைய நடைமுறைப்படி தோ்தல் ஆணையா் தோ்வு முறையை அமல்படுத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு முறையில் தோ்தல் நடைபெறுவதை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய முறைப்படி வாக்குச்சீட்டு அடிப்படையிலான தோ்தல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். தோ்தல் ஆணையா் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் மாவட்டம் முழுவதும் தொடா் பிரசாரம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments