ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனித்து செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துடன், ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் பலவும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என். குணசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.
எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் கோடிக்கணக்கான வாக்காளர்களை நீக்கி வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
Communist parties stage protest demanding the removal of Gyanesh Kumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.