FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் மீதான பதவி நீக்கம் தீர்மானம் முறியடிப்பு

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் முறியடிக்கப்பட்டுள்ளது குறித்து...

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸெத் - AP
பகிர்:

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் முறியடித்துள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை, பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத்தின் பதவிக்கால நடத்தை மற்றும் ஈரானில் நடந்து வரும் போரைக் கையாண்ட விதம் தொடர்பாக அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை நிராகரித்துள்ளது.

Advertisement

Advertisement

கென்டக்கியைச் சேர்ந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தாமஸ் மாஸ்ஸி, பீட் ஹெக்செத்தை பதவிநீக்கம் செய்யக்கோரி தீர்மானம் கொண்டு வந்தார். ஜனநாயகக் கட்சியினரால் ஆதரிக்கப்பட்ட இந்தத் தீர்மானம், அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

பெரும்பாலான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பீட் ஹெக்செத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 211 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 204 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதையடுத்து பதவி நீக்க நடவடிக்கை தற்போதைக்கு முடக்கப்பட்டுள்ளது.

இடைக்காலத் தேர்தல்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க இழப்புகளைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சிக்கு அதிகரித்து வரும் அரசியல் சவால்களுக்கு மத்தியில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

ஈரானில் நடக்கும் போரும், அதன் விளைவாக ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வும் கட்சிக்குள் பெரும் கவலைக்குரிய பிரச்னைகளாக உருவெடுத்துள்ளன.

இருப்பினும், இந்தத் தீர்மானத்தின் நிராகரிப்பு ஹெக்செத்துக்கு தற்காலிக நிவாரணத்தை மட்டுமே அளிக்கக்கூடும். ஏனெனில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியினர் வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பதவியேற்க உள்ளனர். அப்போது இரு அவைகளின் கட்டுப்பாட்டையும் ஜனநாயகக் கட்சியினர் கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பீட் ஹெக்செத் மீதான நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பீட் ஹெக்செத், எனக்கு எதிரான இந்த தீர்மானம் ராணுவ சேவையயையும், தலைமையையும் தண்டிக்கும் முயற்சியாக பார்க்கிறேன். கொள்கை ரீதியிலான வேறுபாடுகள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவி நீக்கத்திற்கான குற்றங்கள் ஆகாது என கூறியுள்ளார்.

The United States House of Representatives has rejected a resolution seeking the impeachment of Defence Secretary Pete Hegseth over his conduct in office and handling of the ongoing war in Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.