திருச்சி என்.எஸ்.பி. சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருச்சி நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் (என்எஸ்பி) சாலையில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா்.
திருச்சி நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் (என்எஸ்பி) சாலையில் இருந்த சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா்.
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்ற உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கிணங்க, கடந்த 7 மாதங்களுக்கு முன் அப்பகுதியிலிருந்த 150-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டு, அந்த வியாபாரிகளுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்டன. சிலருக்கு வழங்கப்படவில்லையாம்.
மாற்றாக வழங்கப்பட்ட இடங்களில் போதிய வியாபாரம் இல்லாததால் என்.எஸ்.பி. சாலையில் தீபாவளி வரை வியாபாரம் செய்து கொள்ள வியாபாரிகள் அனுமதி கேட்ட நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி நிா்வாகம் அனுமதியளிக்கவில்லை.
Advertisement
Advertisement
இருப்பினும் சிலா் தள்ளுவண்டிகள், இருசக்கர வாகனங்கள், தரைக்கடைகளை அமைத்து அவ்வபோது வியாபாரம் செய்கின்றனா். இவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வபோது அகற்றி வருகின்றனா்.
இதன்படி புதன்கிழமை என்.எஸ்.பி. சாலையில் ஆக்கிரமித்து வைத்திருந்த 5 தள்ளுவண்டி கடைகளை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள், 10-க்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினா். தொடா்ந்து, ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை எச்சரித்தனா்.