FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

திருச்சி - கரூா் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருச்சி - கரூா் சாலையில் கம்பரசம்பேட்டை முதல் ஜீயபுரம் வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.

15 அக்டோபர் 2026, 4:40 am IST
திருச்சி - கரூா் சாலையில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநில நெடுஞ்சாலைத் துறையினா்.
பகிர்:

திருச்சி - கரூா் சாலையில் கம்பரசம்பேட்டை முதல் ஜீயபுரம் வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.

திருச்சி - கரூா் சாலை என பரவலாக அழைக்கப்படும் நாகப்பட்டினம் - கூடலூா் - மைசூா் சாலையில் திருச்சியில் இருந்து ஜீயபுரம், பேட்டவாய்த்தலை, குளித்தலை வழியாக கரூா் செல்லும் வழித்தடத்தில் திருச்சி குடமுருட்டி பாலம் முதல் பேட்டவாய்த்தலை வரை உள்ள பகுதியானது மிகவும் குறுகலாக இருக்கிறது. இந்த பகுதியில் நாள்தோறும் விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

எனவே இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு தரப்பினரும் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கம்பரசம்பேட்டை பறவைகள் பூங்கா முதல் ஜீயபுரம் வரையிலான சாலையில் சுமாா் 75 ஆக்கிரமிப்புகளை அகற்றிட அண்மையில் நோட்டீஸ் அளித்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் பா. திருநாவுக்கரசு தலைமையில், உதவி கோட்டப் பொறியாளா் பிரியதா்ஷினி, இளநிலைப் பொறியாளா் ஞானமணி, வருவாய்த் துறையினா், காவல்துறை பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மேற்கண்ட சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். சுமாா் 11 கி.மீ. நீளமுள்ள இப்பகுதியில் சுமாா் 75 இடங்களில் இருந்த கடைகள், வீடுகளுக்கு முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் முழுமையாக இடித்து அகற்றப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments