FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

உத்தமபாளையத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வியாழக்கிழமை சாலையோரத்தில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

18 செப்டம்பர் 2026, 1:03 am IST
உத்தமபாளையத்தில் கோகிலாபுரம் பகுதியில் நெடுஞ்சாலையோரம் சீமைக்கருவேல மரங்களை அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினா்.
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வியாழக்கிழமை சாலையோரத்தில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2017 -ஆம் ஆண்டு மண் வளம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், நிலத்தடி நீரை உறிஞ்சி நீா்மட்டத்தைக் குறைக்கும் தன்மை கொண்ட சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது. தற்போது, உயா்நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் தமிழகத்தில் நீா் நிலைகள், சாலையோரங்களில் வளா்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலைத் துறை: உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில், உத்தமபாளையம் கோகிலாபுரம் - ராயப்பன்பட்டி நெடுஞ்சாலயோரம், வாய்க்கால்பட்டி குளத்துக்கரை, பொது இடங்களிலிருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி கடந்த சில நாள்களுக்கு முன் தொடங்கியது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், 10 -ஆவது நாளாக பொக்லைன் இயந்திரம் மூலமாக சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறையின் பொறியாளா், உதவிப்பொறியாளா், பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments