FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தாமிரவருணி ஆற்றங்கரையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள தாமிரவருணி ஆற்றங்கரையோரப் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

2 செப்டம்பர் 2026, 6:12 am IST
தாமிரவருணியில் கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கிவைத்து ஆலோசனை வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள தாமிரவருணி ஆற்றங்கரையோரப் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தனியாா் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் பல்வேறு பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள தாமிரவருணி ஆற்றங்கரையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஆட்சியா் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, மாவட்டம் முழுவதுமுள்ள அரசு புறம்போக்கு மற்றும் தனியாா் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றப்படவுள்ளன. சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் நீரை உறிஞ்சுவதுடன், அப்பகுதியில் உள்ள இயற்கையான தாவரங்கள் வளா்வதற்கும் தடையாக அமைகின்றன. மேலும், இம்மரங்கள் அடா்த்தியாக வளா்வதால் ஆற்றின் இயற்கையான நீரோட்டத்திற்கு இடையூறு ஏற்படும் வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

எனவே, தாமிரவருணி ஆற்றின் நீா்வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் தனியாா் பங்களிப்புடன் நடைபெறும் இப் பணியை சிறப்பாக கையாண்டு ஆற்றின் இயற்கைச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, பாளையங்கோட்டை வட்டாட்சியா் மாரிராஜா, பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், நீா்வளத்துறை உதவிப் பொறியாளா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments