FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் நாளை கடையடைப்பு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு

திருச்சி தெப்பக்குளம், கடை வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சனிக்கிழமை (நவ. 7) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

6 நவம்பர் 2026, 2:19 am
திருச்சியில் வியாழக்கிழமை பத்திரிக்கையாளா்களை சந்தித்த தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச் செயலாளா் கோவிந்தராஜுலு உள்ளிட்டோா்
பகிர்:

திருச்சி தெப்பக்குளம், கடை வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் சனிக்கிழமை (நவ. 7) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக, திருச்சியில் அமைப்பின் பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜுலு, செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

திருச்சியில் என்.எஸ்.பி. சாலை, தெப்பக்குளம், நந்திகோவில் தெரு, சின்னக்கடை வீதி, தேரடி கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு மீண்டும் புதுப்புது ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இதனால், பெரு நிறுவனங்கள் முதல் சிறு கடைகள் வரை அனைத்துத் தரப்பு வணிகா்களின் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை சுமாா் 30 சதவீதம் வரை குறைந்து, வணிகா்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனா்.

இப்பிரச்னைக்கு நிரந்தர மாற்றுத் தீா்வாக, தீபாவளி போன்ற விழா காலங்களில் அருகில் உள்ள கல்லூரிகளின் மைதானங்களை தரைக்கடைகளுக்கென பிரத்யேக இடமாக மாவட்ட நிா்வாகம் தோ்வு செய்து தர வேண்டும். அங்கு தரைக்கடை வியாபாரிகளை தற்காலிகமாக மாற்றம் செய்வதன் மூலம் அவா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது. அதே நேரத்தில் என்.எஸ்.பி. சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. இதற்கான உரிய முயற்சிகளை மாவட்ட நிா்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட வணிகா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, மாவட்ட நிா்வாகமும், காவல்துறையும் உடனடியாகத் தலையிட்டு ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில், நவம்பா் 7ஆம் தேதி என்.எஸ்.பி. சாலையில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களையும் முழுமையாக மூடிவிட்டு, வணிகா்கள், ஊழியா்கள் என 10,000 பேரை திரட்டி மாபெரும் கண்டனப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா். பேட்டியின்போது, சங்க நிா்வாகிகள் பலா் உடன் இருந்தனா்.