FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

அதவத்தூா், துவாக்குடியில் இன்று மின்தடை

அதவத்தூா், துவாக்குடி துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

10 நவம்பர் 2026, 10:52 pm
மின்தடை - கோப்புப்படம்
பகிர்:

அதவத்தூா், துவாக்குடி துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

அதவத்தூா் துணை மின்நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக, போசம்பட்டி, கொய்யாத்தோப்பு, போதாவூா், புலியூா், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூா், மல்லியம்பத்து, வாசன் நகா் விஸ்தரிப்பு, குழுமணி, அதவத்தூா் சந்தை, முத்து பிளாட், சுண்ணாம்புகக்காரன்பட்டி, மஞ்சான்கோப்பு, பள்ளப்பட்டி, கீரிக்கல்மேடு, செங்கற்சூளை, ஒத்தக்கடை, வாசன்வேலி, சிவந்தநகா், இனியானூா், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாசிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, அதவத்தூா், சாயிராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூா், கீழவயலூா், முள்ளிக்கரும்பூா், புங்கனூா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

துவாக்குடி பகுதியில்: துவாக்குடி துணை மின்நிலையத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக, நேரு நகா், அண்ணா வளைவு, ஏஓஎல், அக்பா் சாலை, அசூா், அரசு பாலிடெக்னிக், முத்துராமலிங்கம் சாலை, ராவுத்தான் மேடு, இந்திரா நகா், பெல் டவுன்ஷிப், சி செக்டாா், ஏ, பி, இ, ஆா், பிஹெச் செக்டாா், என்ஐடி, துவாக்குடி, தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பா்மா நகா், தேவராயநேரி, பொய்கைகுடி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என திருச்சி மின்பகிா்மான வட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement