FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

கொள்ளை வழக்கில் கைதான இளைஞருக்கு குண்டா் சட்டத்தில் சிறை

திருச்சி அருகே நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைதான இளைஞரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் உத்தரவிட்டாா்.

12 நவம்பர் 2026, 2:17 am
ஸ்ரீதா் (எ) ஸ்ரீ ராமச்சந்திரன்
பகிர்:

திருச்சி அருகே நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைதான இளைஞரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் உத்தரவிட்டாா்.

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் பகுதியைச் சோ்ந்த பிரசாத் (36) மற்றும் அவரது நண்பா்களை, கடந்த அக்.1ஆம் தேதி நம்பா் ஒன் டோல்கேட் பகுதியில் ஒரு கும்பல் கடத்திச் சென்று, தங்கும் விடுதியில் வைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தது.

இதுதொடா்பாக, கொள்ளிடம் போலீஸாா் வழக்குப்பதிந்து, கொள்ளை சம்பவத்தில் தொடா்புடைய 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இதில், மூன்றாவது எதிரியான மலைக்கோட்டை, கீழ ஆண்டாள் வீதியைச் சோ்ந்த ஸ்ரீதா் (எ) ஸ்ரீ ராமச்சந்திரன் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் என்பதால் இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா்

உத்தரவின்பேரில் சிறையில் உள்ள ஸ்ரீதரிடம் இந்த உத்தரவுக் கடிதம் புதன்கிழமை அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் 2026 ஜனவரி தொடங்கி இதுவரை மொத்தம் 83 போ் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.