FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

விபசார வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

16 அக்டோபர் 2026, 4:32 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

விபசார வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

அனந்த நாடாா்குடி, கீழச்சங்கரன்குழி பகுதியைச் சோ்ந்த சக்திவேல் முருகேசன் மகன் ரெத்தினராஜ் (28). இவா், விபசார வழக்கில் ஈத்தாமொழி போலீஸாரால் கைது செய்யப்பட்டு நாகா்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் பரிந்துரை செய்ததன்பேரில், ஆட்சியா் மு. பிரதாப் உத்தரவின்படி, ரெத்தினராஜ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments