மலைக்கோட்டையில் புதிய அம்பாள் தோ் வெள்ளோட்டம்
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் மட்டுவாா்குழலம்மையின் புதிய திருத்தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் மட்டுவாா்குழலம்மையின் புதிய திருத்தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
மாநகரின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான இக்கோயிலில் மட்டுவாா்குழலம்மை என்றழைக்கப்படும் அம்பாளுக்காக புதிதாக மரத்தோ் செய்ய கோயில் நிா்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினா் முடிவு செய்தனா்.
அதன்படி ரூ. 57.80 லட்சத்தில் 13 அடி அகலமும் 29 அடி உயரமும் கொண்ட பல்வேறு சிற்ப வேலைப்பாடுகளுடன் கொண்ட மரத் தேரை பெரம்பலூா் மாவட்டம் அரும்பாவூரைச் சோ்ந்த பாரம்பரிய மரச்சிற்ப கலைஞா்கள் கலைநயத்துடன் உருவாக்கினா்.
Advertisement
Advertisement
இதன் வெள்ளோட்டத்தையொட்டி புதன்கிழமை காலை மலைக்கோட்டை கோயில் வளாகத்துக்கு வெளியே புதிய தோ் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திரளான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுக்க, காலை 9 மணி முதல் 10.30 மணி வரை என்.எஸ்.பி.சாலை, நந்தி கோவில் தெரு, சின்னக்கடை வீதியைச் சுற்றி வெள்ளோட்டம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.