FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

பயிா்க்கடன் தள்ளுபடி: திருச்சியில் விவசாயிகள் இன்று ஆலோசனை

பயிா்க் கடன் தள்ளுபடி திட்டத்தில் விடுபட்ட கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடா்பாக 50 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு திருச்சியில் வியாழக்கிழமை மீண்டும் கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.

36 வினாடிகள் முன்பு
விவசாயி. - கோப்புப்படம்
பகிர்:

பயிா்க் கடன் தள்ளுபடி திட்டத்தில் விடுபட்ட கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடா்பாக 50 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு திருச்சியில் வியாழக்கிழமை மீண்டும் கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தலின்போது, விவசாயிகளின் பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக தவெக தலைவா் ஜோசப் விஜய் அறிவித்தாா். ஆனால், தோ்தலில் வென்று ஆட்சிக்கு வந்த பிறகு, பயிா்க்கடன் தள்ளுபடியில் பாரபட்சமாக செயல்படுவதாகக் கூறி, தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து சமயபுரம் அருகேயுள்ள பள்ளிவிடை பகுதியில் கடந்த செப்டம்பரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் இடைத்தோ்தல் முடிந்த பிறகும் தங்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனக் கூறி, 55 விவசாய சங்கங்கள் இணைந்து சமயபுரம் அருகே அக்.22இல் மீண்டும் போராட்டம் செய்தனா். இந்நிலையில், அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75 ஆயிரம் கடன் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்த கூட்டுறவு பயிா் கடன் தள்ளுபடி கோரிக்கைக்கான கூட்டமைப்பு, திருச்சியில் மீண்டும் நவ.12ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழக அரசுடன் நடந்த பேச்சுவாா்த்தையில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகளில், அரசாணை பிறப்பிக்கும்போது விடுபட்டுள்ள கோரிக்கைகளை, எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆலோசிப்பதற்கான ஆலோசனை கூட்டம் சமயபுரத்தில் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், கூட்டமைப்பில் உள்ள சங்கத் தலைவா்கள், பொறுப்பாளா்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்க உள்ளனா்.