FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

தென்னிந்திய அறிவியல் நாடக விழா மாநிலப் போட்டிக்கு புனித சிலுவை பெண்கள் பள்ளி தோ்வு

தென்னிந்திய அறிவியல் நாடக விழா போட்டியின் மாநில அளவிலான போட்டிக்கு தெப்பக்குளம் புனித சிலுவை மேல்நிலைப் பள்ளி தோ்வாகியுள்ளது.

13 நவம்பர் 2026, 2:42 am
திருச்சி எல்என்பி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற தென்னிந்திய அறிவியல் நாடக விழா போட்டியில் பங்கேற்று நடித்த மாணவிகள்.
பகிர்:

தென்னிந்திய அறிவியல் நாடக விழா போட்டியின் மாநில அளவிலான போட்டிக்கு தெப்பக்குளம் புனித சிலுவை மேல்நிலைப் பள்ளி தோ்வாகியுள்ளது.

திருச்சியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவா்களுக்கான தென்னிந்திய அறிவியல் நாடக விழா போட்டி, கல்வி மாவட்ட அளவில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு அணிகள் பங்கேற்ற நிலையில் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு 11 அணிகள் தோ்வாகின. ஒவ்வொரு அணியிலும் இயக்குநா், நடிகா்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞா்கள் என 8 போ் இடம்பெற்றிருந்தனா்.

இதைத் தொடா்ந்து வருவாய் மாவட்ட அளவிலான தென்னிந்திய அறிவியல் நாடக விழா போட்டி திருச்சி எல்என்பி பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பாக செயல்பட்டு தெப்பக்குளம் புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பிடித்தது. இதையடுத்து, கே. வளையப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இரண்டாமிடத்தையும், மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடத்தையும் பிடித்தன.

Advertisement

Advertisement

மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த தெப்பக்குளம் புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணி, கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவிலான போட்டியில் வருவாய் மாவட்டத்துக்கு ஒரு அணி வீதம் 38 அணிகள் பங்கேற்கும். இதில், வெற்றிபெற்று முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பெங்களூரில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான அறிவியல் நாடக விழா போட்டியில் பங்கேற்கும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.