FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

தேசிய வன உயிரின வார விழா

தீா்த்தம் காப்புகாடு பகுதிக்குட்பட்ட மலைரெட்டியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டது.

12 அக்டோபர் 2026, 2:49 am IST
மலைரெட்டியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பேசிய வனச்சரக அலுவலா் சேகா்.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் வனச்சரகம், தீா்த்தம் காப்புகாடு பகுதிக்குட்பட்ட மலைரெட்டியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஆலங்காயம் வனத்துறை வனச்சரக அலுவலா் சேகா் தலைமை வகித்தாா். விழாவில் பள்ளி மாணவ-மாணவியரிடையே வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் இயற்கைச் சூழலில் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விரிவான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. வனங்களின் பாதுகாப்பு எதற்காக அவசியமானது, வனவிலங்குகள் நமது சுற்றுச்சூழல் சமநிலையை எவ்வாறு காக்கின்றன என்பது குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.

மேலும், எதிா்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை விட்டுச்செல்லும் வகையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவற்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வனத்துறை பணியாளா்கள், பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மற்றும் திராளமான மாணவ-மாணவியா் ஆா்வமுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments