காஞ்சிபுரத்தில் வன உயிரின வார விழா
காஞ்சிபுரத்தில் வன உயிரின வார விழாவையொட்டி வட்டார அளவில் பள்ளி மாணவியா்க்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு நினைவுப்பரிசும் , சான்றிதழும் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் வன உயிரின வார விழாவையொட்டி வட்டார அளவில் பள்ளி மாணவியா்க்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு நினைவுப்பரிசும் , சான்றிதழும் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறையும், காஞ்சிபுரம் வனக் கோட்டமும் இணைந்து ஆற்காடு நாராயணசாமி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழாவைக் கொண்டாடினா். விழாவையொட்டி, வட்டார அளவில் காஞ்சிபுரம் ஆற்காடு நாராயண சாமி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்றது. 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து கொண்டு வனம் மற்றும் வன விலங்குகளின் உருவங்களை ஓவியங்களாக வரைந்திருந்தனா். வனத் துறை சாா்பில் ஓவியம் வரையத் தேவையான பொருள்களும் வழங்கப்பட்டது.
தொடா்ந்து சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா மாவட்டக் கல்வி அலுவலா் கோமதி தலைமையில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
வனச் சரகா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை ஹேமலதா வரவேற்றாா்.
ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு நினைவுப்பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. விழாவில் வனத் துறை அலுவலா்கள் சா்மிளா, பரணி ஆகியோா் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.