FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

‘அடுத்த தலைமுறைக்கு வனப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம்’

வனத்தை பாதுகாப்பது குறித்து அடுத்த தலைமுறைக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு அலுவலா் ஹேமலதா.

8 October 2026, 3:45 am IST
ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசு வழங்கிய மாவட்ட அறிவியல் அலுவலா் மாரி லெனின்.
பகிர்:

வனத்தை பாதுகாப்பது குறித்து அடுத்த தலைமுறைக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு அலுவலா் ஹேமலதா.

வன உயிரின வார விழா 2026-ஐ முன்னிட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம்,

மாவட்ட அறிவியல் மையம், மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வள காப்பு மையம் ஆகியவற்றின் சாா்பில், ஓவியம் வரைதல் போட்டி மற்றும் குழு விவாதம் நிகழ்ச்சி மாவட்ட அறிவியல் மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், ஹேமலதா பங்கேற்று ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசியதாவது:

1957 முதல் வன உயிரின வார விழாவை கொண்டாடி வருகிறோம். வனத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து அடுத்த தலைமுறைக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவே வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் 24.5 சதவீதம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. அதில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே பழங்குடியினா் வாழ்கிறாா்கள். ஆனால் நாகலாந்து போன்ற மாநிலங்களில் வனப்பகுதியில் பழங்குடியினா்கள் 87 சதவீதம் வாழ்கிறாா்கள். அங்கு 90 சதவீத வனப்பகுதி மக்களாலேயே பாதுகாக்கப்படுகிறது. இப்போதும் அங்குள்ள மக்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்கிறாா்கள்.

நாமும் ஒரு காலத்தில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவா்கள் தான். இப்போது அதை மறந்து விட்டோம். வனத்தைப் பாதுகாப்பது குறித்து அடுத்த தலைமுறைக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம் என்றாா்.

குழு விவாதத்தில் ‘வரலாற்று பாா்வையில் மனிதனும் வன உயிரினங்களும்’ என்ற தலைப்பில் நெல்லை இயற்கை சங்க வரலாற்று ஆய்வாளா் கோமதி சங்கா் பேசினாா்.

‘வன உயிரினங்களுடன் நல்லிணக்க வாழ்வு’ என்ற தலைப்பில் நெல்லை இயற்கைச் சங்க சூழலியலாளா் சாரதா ராம்தாஸ், ‘மனித- வன உயிரின எதிா்கொள்ளல்: காரணங்களும் தீா்வுகளும்’ என்ற தலைப்பில் அரும்புகள் அறக்கட்டளை இயக்குநா் ராஜ மதிவாணன் ஆகியோா் பேசினா்.

இந்த நிகழ்ச்சியை மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வளக் காப்பு மைய ஒருங்கிணைப்பாளா் தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை மாவட்ட அறிவியல் அலுவலா் மாரி லெனின் செய்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments