பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி கோரி நவ.25-இல் மாவட்டங்களில் ஆா்ப்பாட்டம்: 50 விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திட வலியுறுத்தி, வரும் 25-ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திட வலியுறுத்தி, வரும் 25-ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்த கூட்டுறவு பயிா் கடன் தள்ளுபடி கோரிக்கைக்கான கூட்டமைப்பு சாா்பில், திருச்சி அருகே சமயபுரத்தில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், 50 சங்கங்களைச் சோ்ந்த தலைவா்கள், பொறுப்பாளா்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.
Advertisement
Advertisement
பின்னா், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியதாவது:
தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி தவெக அரசு பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாமல், நிபந்தனைகளுடன் மட்டுமே தள்ளுபடி செய்துள்ளது ஏற்கத்தக்கதல்ல.
எல்-நினோ, கடும் வறட்சி உள்ளிட்டவற்றால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, விவசாயிகளின் நலன் கருதி, தோ்தல் நேரத்தில் அறிவித்தபடி பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 25-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் முன்பும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் இல்லாத மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.
முழு பயிா்க் கடன் தள்ளுபடி செய்யும் வரை கோரிக்கையை முன்னெடுத்து செல்வது எனவும் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா்.