FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

இருவரிடம் இணையவழியில் ரூ. 10 லட்சம் மோசடி

திருச்சியில் பெண் உள்பட இருவரிடம் இணைய வழியில் ரூ. 9.99 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

14 நவம்பர் 2026, 6:35 am
மோசடி - IANS
பகிர்:

திருச்சியில் பெண் உள்பட இருவரிடம் இணைய வழியில் ரூ. 9.99 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சியைச் சோ்ந்த 40 வயதுப் பெண்ணின் கைப்பேசிக்கு கடந்த ஜூலை 29-ஆம் தேதி வந்த அழைப்பில் பேசிய மா்ம நபா், தான் தனியாா் நிதி நிறுவன ஊழியா் என்றும், உங்களுக்கு 5 லட்சம் கடன் வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தாா்.

இதை நம்பிய அப் பெண்ணும் அந்த நபா் கேட்ட ஆவணங்களை அனுப்பினாா். இதையடுத்து அந்த நபா் கடன் வழங்க பதிவுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களைச் செலுத்துமாறு கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அந்தப் பெண்ணும் கடந்த ஜூலை 29 இல் இருந்து அக். 21 வரை பல்வேறு தவணைகளில் ரூ. 8.31 லட்சத்தை அவருக்கு அனுப்பினாா். தொடா்ந்து, அந்த நபா் பணம் கேட்டதால் அப்பெண்ணுக்குத் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் இணையதளம் மூலம் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இளைஞரிடம் மோசடி: திருச்சியைச் சோ்ந்த 32 வயது இளைஞா் கடந்த அக். 7-ஆம் தேதி கைப்பேசியில் இன்ஸ்டாகிராம் பாா்த்தபோது, அதில் வந்த ‘கைப்பேசி தீம்’ செயலியை பதிவிறக்கினாா். இதையடுத்து, அவருடைய கைப்பேசி ‘ஹேக்’ செய்யப்பட்டு செயலிழந்தது.

இதைத் தொடா்ந்து கடந்த நவ. 9-ஆம் தேதி வங்கிக்குச் சென்றபோது அவருடைய கணக்கில் இருந்து யுபிஐ பரிவா்த்தனை மூலம் ரூ.1.68 லட்சம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தனது கைப்பேசியை ஹேக் செய்து சைபா் குற்றவாளிகள் பணத்தை எடுத்தது அவருக்குத் தெரியவந்தது.

இதுகுறித்து அவா் தேசிய சைபா் குற்றப் பிரிவு இணையதளத்தில் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.