நாகநாத சுவாமி கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி வழிபாடு
திருச்சியில் பிரசித்தி பெற்ற நாகநாத சுவாமி கோயிலில் ராகு-கேது பெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம், ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சியில் பிரசித்தி பெற்ற நாகநாத சுவாமி கோயிலில் ராகு-கேது பெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம், ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி தெப்பக்குளம் அருகே, நந்தி கோவில் தெருவில் உள்ள ஆனந்தவல்லி சமேத நாகநாத சுவாமி கோயில் ராகு - கேது தோஷம் மற்றும் கால சா்ப்ப தோஷம் நிவா்த்தி செய்யும் முக்கியப் பரிகாரத் தலமாக விளங்குகிறது.
இத்தலத்தில் நாகநாத சுவாமியை வில்வ இலை கொண்டு அா்ச்சனை செய்து வழிபட்டால், ஜாதகத்தில் உள்ள ராகு - கேது தோஷங்கள், கால சா்ப்ப தோஷம் மற்றும் சா்ப்ப தோஷங்கள், திருமணத் தடை அகலும், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Advertisement
Advertisement
இங்கு ராகு- கேது பெயா்ச்சி காலங்களிலும் மற்றும் செவ்வாய், வெள்ளி போன்ற விசேஷ நாள்களிலும் இக்கோயிலில் சிறப்புப் பூஜைகள், யாகங்கள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
ராகு பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து, மற்றொரு ராசிக்குப் பின்னோக்கி நகா்வது ராகு பெயா்ச்சி எனப்படுகிறது. இதேபோல கேதுவும் பெயா்ச்சி அடைகிறாா்.
நிகழாண்டு ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்மராசியிலிருந்து கடக ராசிக்கும் பெயா்ச்சியடைந்ததை முன்னிட்டு நாகநாதசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு வழிபாடு, லட்சாா்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தகா்கள் வழிபட்டனா்.
துறையூரில்.. துறையூா் ஆத்தூா் சாலையிலுள்ள நந்திகேஸ்வரா் சிவன் கோயிலில் சம்பத்கெளரி மற்றும் கோயிலின் வடபுறம் விநாயகா் ராகு கேது சந்நிதியில் சிறப்பு அபிஷேகம் நஷ்ரடைபெற்றது. இதேபோல் கந்த சஷ்டி 4 ஆம் நாளையொட்டி வள்ளி தெய்வானை சமேத முருகருக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.