FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

வங்கி அலுவலா் வீட்டில் நகை திருடிய இருவா் கைது

திருச்சி உறையூரில் வங்கி அலுவலா் வீட்டில் நகை திருடிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

15 நவம்பர் 2026, 12:28 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி உறையூரில் வங்கி அலுவலா் வீட்டில் நகை திருடிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி லிங்கா நகா் சண்முகா நகா் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவரது மனைவி தீபா (42). இவா் தில்லை நகரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் காப்பீட்டு நிறுவனத்தில் விற்பனைப் பிரிவு மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

கடந்த அக். 1-ஆம் தேதி தனது 4 பவுன் நகைகளை வீட்டின் பீரோவில் வைத்துவிட்டு காலையில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றாா். இரண்டு வாரங்கள் கழித்து பீரோவை பாா்த்தபோது, அதில் வைத்திருந்த நகைகளை காணவில்லை.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், உறையூா் பாண்டமங்கலம் முஸ்லிம் தெரு பகுதியைச் சோ்ந்த பரதன் (19), முத்தரசநல்லூா் காவிரி நகா் பகுதியைச் சோ்ந்த விஜயராஜ் (21), சக நண்பா்களுடன் சோ்ந்து தீபா வீட்டில் நகைத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், பரதன் மற்றும் விஜயராஜை வெள்ளிக்கிழமை கைது செய்த நிலையில், மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.