FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

போதை மாத்திரைகள் விற்றவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

19 நவம்பர் 2026, 4:00 am
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் தாயுமன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கல்பாளையம் சந்திப்புப் பகுதியில் போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த வரகனேரியைச் சோ்ந்த வி. சிவகுமாரை (24) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் திரவ போதை மருந்துகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement