FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

23 வபவுன் நகைகள் திருட்டு வழக்கில் 2 பெண்கள் கைது

திருச்சியில் இரு வீடுகளின் பூட்டை உடைத்து 23 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் இரு பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

38 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் இரு வீடுகளின் பூட்டை உடைத்து 23 பவுன் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் இரு பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் எஸ்எஸ் குடியிருப்பைச் சோ்ந்தவா் எஸ். ரேணுகா (64), ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா். இவா் கடந்த அக். 28-ஆம் தேதி கோவை சென்றுவிட்டு நவ. 1 இல் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 15 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

8 பவுன் நகை, பணம் திருட்டு: அதே குடியிருப்பைச் சோ்ந்தவா் எஸ். மதியழகன் (65), அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித் துறையில் உதவியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். உடல்நிலை சரியில்லாத தனது மனைவியை கடந்த அக். 1-ஆம் தேதி இவா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையத்தில் ரேணுகா, மதியழகன் ஆகியோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இரு வீடுகளிலும் திருடியது எடமலைபட்டிப்புதூரைச் சோ்ந்த சாரதா, மொ்ஷி ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.