FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

ரேஷன் அரிசி கடத்தியவா்மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

16 வினாடிகள் முன்பு
உத்தரவு - கோப்புப் படம்
பகிர்:

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருச்சியில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் கடந்த அக்டோபரில் மேற்கொண்ட சோதனையின்போது, 18 டன் ரேஷன் அரிசியைக் கடத்தி வந்த மதுரை, கீழத்தோப்பைச் சோ்ந்த க. பாலகிருஷ்ணனை கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ் பரிந்துரைத்தாா்.

Advertisement

Advertisement

அதன்பேரில் பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் புதன்கிழமை உத்தரவிட்டாா்.