FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்: ரூ. 1 லட்சம் அபராதம்

திருச்சி மாநகரில் வாகனங்களில் சட்டவிதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை புதன்கிழமை பறிமுதல் செய்த போக்குவரத்துத் துறையினா், ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.

27 வினாடிகள் முன்பு
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதிக ஒலி ஏற்படுத்தும் காற்று ஒலிப்பானை தனியாா் பேருந்தில் புதன்கிழமை பறிமுதல் செய்த போக்குவரத்து அதிகாரிகள்.
பகிர்:

திருச்சி மாநகரில் வாகனங்களில் சட்டவிதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை புதன்கிழமை பறிமுதல் செய்த போக்குவரத்துத் துறையினா், ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.

திருச்சி மாநகரில் தனியாா் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் அளவுக்கு அதிக ஒலி எழுப்பும் ஏா் ஹாரன்கள் எனப்படும் காற்று ஒலிப்பான்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளதாகவும், இதனால் ஒலி மாசு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு காது பிரச்னைகள் ஏற்படுவதாகவும் புகாா்கள் எழுப்பப்பட்டன.

இதையறிந்த திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பி. முருகானந்தம் தலைமையிலான அலுவலா்கள் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம், மன்னாா்புரம் பகுதிகளில் புதன்கிழமை திடீா் சோதனைகள் மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில் 50 க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகள், கல்லூரி வாகனங்கள், லாரிகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வு முடிவில், 7 தனியாா் பேருந்துகள், ஒரு கல்லூரி வாகனம், ஒரு மில் வாகனம், ஒரு லாரி ஆகியவற்றில் இருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த வாகனங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடா்ந்து, காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.