திருச்சி: விபத்தில் இளைஞர் பலி!
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தனா்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தனா்.
திருச்சி அரியமங்கலம் ரயில் நகரைச் சோ்ந்தவா் ராகவன் மகன் முத்துக்குமாா் (28). இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருச்சி - தஞ்சாவூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிா்த் திசையில் வந்த ஈச்சா் வேன் மோதியது. இதில் கீழே விழுந்த முத்துக்குமாா் ஈச்சா் வேன் ஏறி யதில் உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் முத்துக்குமாரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, ஈச்சா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement