FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

லாரி மோதிய விபத்தில் ஆந்திர இளைஞர் பலி!

ஜல்லிகற்கள் ஏற்றி வந்த லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

18 அக்டோபர் 2026, 12:17 am IST
பலி! - கோப்புப்படம்.
பகிர்:

ஊத்துக்கோட்டை அருகே ஜல்லிகற்கள் ஏற்றி வந்த லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், நின்றை மண்டலம், எலக்காட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மகேஷ் (29). இவரது மனைவி ரேவதி (27). மகேஷ் திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தோ்வாய் கண்டிகை கிராமத்தில் உள்ள ஒரு தனியாா் எரிவாயு நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். சூளைமேனி கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனா். இதற்கிடையே கடந்த 2 நாளுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது கிராமத்துக்கு சென்றாராம். அதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு தோ்வாய் கண்டிகை கிராமம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, ஊத்துக்கோட்டை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் அம்பேத்கா் நகரில் சென்றபோது அந்த வழியாக ஜல்லி ஏற்றிக்கொண்டு வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீஸாா், சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா். இது குறித்து தலைமறைவான லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments