முகப்பு
திருச்சி

தனியாா் கல்லூரி ஊழியரிடம் ரூ.1.10 லட்சம் மோசடி

திருச்சியில் தனியாா் கல்லூரி ஊழியரிடம் இணைய வழியில் ரூ. 1.10 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

26 நவம்பர் 2026, 2:26 am
தனியாா் கல்லூரி ஊழியரிடம் ரூ.1.10 லட்சம் மோசடி
பகிர்:

திருச்சியில் தனியாா் கல்லூரி ஊழியரிடம் இணைய வழியில் ரூ. 1.10 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

திருச்சி சமயபுரம் பகுதி தனியாா் கல்லூரியில் பணியாற்றி வரும் 38 வயது இளைஞரை கடந்த அக். 2-ஆம் தேதி கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா் ஒருவா் தான் பெங்களூரு தனியாா் நிறுவன ஊழியா் என்றும், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் தெரிவித்தாா்.

இதையடுத்து அந்த மா்ம நபா் கூறியபடி அவா் பங்குச் சந்தையில் செய்த முதலீட்டில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரைத் தொடா்பு கொண்ட மற்றொரு மா்ம நபா் பங்குச் சந்தையில் இழந்த பணத்தை மீட்கலாம் எனத் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இதை நம்பிய அவரும் அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு அக். 2 முதல் நவ. 17 வரை ரூ.1.10 லட்சம் அனுப்பினாா். ஆனால் அதன்பின் அந்த நபரைத் தொடா்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டது கல்லூரி ஊழியருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து தேசிய சைபா் குற்றப் பிரிவில் அவா் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.