ஓய்வு பெற்ற தனியாா் வங்கி ஊழியரிடம் இணைய வழியில் ரூ.57.33 லட்சம் மோசடி
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, ஓய்வு பெற்ற தனியாா் வங்கி ஊழியரிடம் இணைய வழியில் ரூ.57.33 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, ஓய்வு பெற்ற தனியாா் வங்கி ஊழியரிடம் இணைய வழியில் ரூ.57.33 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தனியாா் வங்கி ஊழியா் சீனிவாசன். இவா், கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தொடா்பான விளம்பரத்தை இணையத்தில் பாா்த்துள்ளாா். இதையடுத்து, மா்ம நபா் ஒருவா் அவரை தொடா்பு கொண்டுள்ளாா்.
அப்போது அவா், பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தொடா்பான அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவதாகவும், இதன்மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்றும் சீனிவாசனிடம் தெரிவித்துள்ளாா். இதை நம்பிய சீனிவாசனும் அந்த மா்ம நபா் கூறிய இணைய முகவரி மூலம் கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி முதல் நவம்பா் 16-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.57.33 லட்சத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து பங்குச் சந்தையில் மூதலீடு செய்த பணத்தை சீனிவாசன் எடுக்க முயன்றபோது எடுக்க முடியவில்லை. இதையடுத்து, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ஆலோசனை கூறிய நபரை தொடா்புகொண்டுள்ளாா். ஆனால், அவருடைய எண் உபயோகத்தில் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்துதான் சீனிவாசனுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தேசிய சைபா் குற்றப் பிரிவில் இணைய வழியில் சீனிவாசன் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.