இந்திய பங்குச் சந்தையில் ரூ. 53,739 கோடி முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!
தொடர்ந்து 2 மாதங்களாக இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து முதலீடுகளை திரும்ப் பெற்று வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நவம்பர் மாதத்தில் பங்குகளை வாங்கி குவித்துள்ளனர்.
புதுதில்லி: உலகளாவிய பங்குச் சந்தையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த விற்பனை சரிவு, வலுவான உள்நாட்டு வருவாய் வளர்ச்சி, முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கவர்ச்சிகரமான விலையில் கிடைப்பதால், தொடர்ந்து 2 மாதங்களாக இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து முதலீடுகளை திரும்ப் பெற்று வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நவம்பர் மாதத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் இந்தியப் பங்குச் சந்தையில் ரூ. 53,739 கோடி முதலீடு செய்துள்ளனர்.
தரவுகளின் அடிப்படையில், அக்டோபர் மாதம் ரூ. 34,843 கோடியும், செப்டம்பரில் ரூ. 35,861 கோடியும் தொடர்ந்து முதலீடு செய்து வந்துள்ளனர். இதற்கு அமெரிக்கா மற்றும் தென் கொரியா, தைவான், ஜப்பான் போன்ற பிற செயற்கை நுண்ணறிவு சந்தைகளில் ஏற்பட்ட விற்பனை சரிவே, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் நிலைப்பாட்டில் இந்த திடீர் மாற்றம் என தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் டேட்டா சென்டர்களுக்கான முதலீட்டுச் செலவுகள் குறித்த அச்சம், இந்தியப் பங்குச் சந்தையின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியினர், டேட்டா சென்டர்களுக்கான கட்டுப்பாடற்ற முதலீட்டுச் செலவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு உரிய கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
பரவலாக செயற்கை நுண்ணறிவு அல்லாத வர்த்தக நாடாகக் கருதப்படும் இந்தியா, செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த உலகளாவிய பங்குச் சந்தை சரிவால், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியா கவர்ச்சிகரமான முதலீட்டுத் தளமாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, வருவாய் வளர்ச்சி மற்றும் பெரிய நிறுவனப் பங்குகளின் கவர்ச்சிகரமான மதிப்பீடுகள் அதன் ஈர்ப்பை மேலும் வலுப்படுத்தியது.