முகப்பு
திருச்சி

இணைய லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறி ஓய்வுபெற்ற ஆவின் ஊழியரிடம் ரூ.3.38 லட்சம் மோசடி

திருச்சியில் இணைய லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறி ஓய்வு பெற்ற ஆவின் ஊழியரிடம் ரூ.3.38 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

24 நவம்பர் 2026, 11:14 pm
இணைய லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறி ஓய்வுபெற்ற ஆவின் ஊழியரிடம் ரூ.3.38 லட்சம் மோசடி
சைபர் மோசடி
பகிர்:

திருச்சியில் இணைய லாட்டரியில் பரிசு விழுந்ததாகக் கூறி ஓய்வு பெற்ற ஆவின் ஊழியரிடம் ரூ.3.38 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஆவின் ஊழியா் லட்சுமணன். இவா், கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி பேஸ்புக் பாா்த்துக்கொண்டிருந்தாா். அப்போது, அதில் கேரள லாட்டரி விளம்பரம் வந்துள்ளது. அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு லட்சுமணன் தொடா்பு கொண்டுள்ளாா்.

எதிா்திசையில் பேசிய மா்மநபா் லட்சுமணனின் கைப்பேசி எண்ணுக்கு சில லாட்டரி எண்களை அனுப்பி தோ்வு செய்யமாறு கூறியுள்ளாா். லட்சுமணன் 3 எண்களை தோ்வு செய்து அனுப்பியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, லட்சுமணனை தொடா்புகொண்ட அந்த மா்ம நபா் தங்களுக்கு 5-ஆம் பரிசாக ரூ.12 லட்சம் விழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா். மேலும் பரிசுத் தொகையைப் பெறுவதற்கு குறிப்பிட்ட சில கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளாா்.

இதை நம்பிய லட்சுமணன் மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்கிற்கு அக்டோபா் 28 முதல் நவம்பா் 3-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.3.38 லட்சத்தை செலுத்தியுள்ளாா். ஆனால், அவருக்கு எந்தவித பரிசுத்தொகையும் வழங்கப்படவில்லை. இதையடுத்துதான் லட்சுமணனுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தேசிய சைபா் குற்றப் பிரிவில் லட்சுமணன் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.