FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டிஜிட்டல் கைது! அரசு ஊழியரிடம் 28 லட்சம் மோசடி செய்த 3 பேர் கேரளத்தில் கைது!

டிஜிட்டல் கைது என்று கூறி, அரசு ஊழியரிடம் 28 லட்சம் மோசடி செய்த 3 பேர் கேரளத்தில் கைது செய்யப்பட்டது பற்றி..

13 அக்டோபர் 2026, 12:05 pm IST
டிஜிட்டல் கைது மோசடி - ENS
பகிர்:

நெல்லையைச் சேர்ந்த அரசு ஊழியரிடம் டிஜிட்டல் கைது செய்திருப்பதாகக் கூறி ரூ.28.50 லட்சம் மோசடி செய்த கேரளத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு குறற்வாளிகளை கைது செய்திருக்கிறார்கள்.

நெல்லை டவுன் தச்சநல்லூரை அடுத்த சேந்திமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அனந்தப்பன் (வயது 61). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார்.

Advertisement

Advertisement

இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த 6-ந்தேதி மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எதிர்திசையில் பேசிய நபர், மும்பையில் உள்ள என்.ஐ.ஏ. காவல் துறையின் மூத்த ஆய்வாளர் சந்தீப்ராஜ் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அந்த நபர், அனந்தப்பனின் எண்ணை பயன்படுத்தி 6 மாநிலங்களில் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, நக்சல் தீவிரவாதிகளுக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக கூறி பீதியை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து அடுத்தநாள் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட மற்றொரு நபர், காவல்துறை சீருடையில் தோன்றி அனந்தப்பனை "டிஜிட்டல் அரெஸ்ட்" செய்வதாக கூறி மிரட்டியுள்ளார். மேலும், ஏ.டி.ஜி.பி. விஸ்வாஸ் என்பவர் உங்களை தொடர்புகொள்வார் எனக் கூறி, அவரது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் சேமிப்பு தொகை விவரங்களை பெற்றுள்ளார்.

விசாரணை என்ற பெயரில் மிரட்டி, ஒரு குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை அனுப்ப வைத்துள்ளனர். மறுநாள் தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு அருகில் சென்று அவர்களை வாட்ஸ் அப் வீடியோ காலில் அனந்தப்பன் தொடர்புகொள்ள முயன்றபோது அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அனந்தப்பன், தனது மகன் மற்றும் மருமகனிடம் விபரங்களை தெரிவித்தனர். அவர்கள் விசாரித்த பின்னரே தாங்கள் ஆன்லைன் மோசடியில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் நெல்லை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் இழந்த பணத்தை மீட்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில், துணை போலீஸ் கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்றது.

அதில் டிஜிட்டல் கைது செய்ததாக கூறி ரூ.28.50 லட்சம் மோசடி செய்தது கேரளா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தனிப்படையினர் விரைந்தனர். தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் நெடுவெளிகாட்டை சேர்ந்த ரவிக்குமார்(52), விஸ்வபுரத்தை சேர்ந்த தினேஷ்(52), கண்ணூர் மாவட்டம் எடக்காடு பகுதியை சேர்ந்த அப்துல் சமது(50) ஆகியோரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments