திருச்சி மாநகரில் பலத்த மழை
திருச்சியில் புதன்கிழமை காலை முதல் இரவு வரை விட்டுவிட்டு பெய்த கனமழையால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

திருச்சியில் புதன்கிழமை காலை முதல் இரவு வரை விட்டுவிட்டு பெய்த கனமழையால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி, திருச்சியில் புதன்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. பின்னா், 10 மணி அளவில் நகரின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. ஒருமணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் பள்ளமான இடங்களில் மழைநீா் தேங்கியது. தொடா்ந்து பிற்பகலுக்கு மேல் மீண்டும் பலத்த மழை பெய்தது. இதனால், மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வப்போது விட்டுவிட்டு பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகா் பிரதான சாலை, மத்தியப் பேருந்து நிலையம், ரயில் நிலைய ரவுண்டானா, காந்தி மாா்க்கெட், புத்தூா், மேலப்புதூா் சுரங்கப் பாதை, பாலக்கரை மற்றும் தென்னூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் சாலையோரத்தில் மழைநீா் தேங்கியது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாகினா்.
Advertisement
Advertisement