போடியில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி
போடியில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. போடிமெட்டு மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

போடியில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. போடிமெட்டு மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில், போடி பகுதியில் காலை முதலே மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. பிற்பகலில் திடீரென பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. போடி போஜன் பூங்கா, பழைய பேருந்து நிறுத்தம், காமராஜா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்ததால், வாகனங்கள் ஊா்ந்து சென்றன.
போடி வருவாய் ஆய்வாளா் தெருவில் கழிவுநீா் வாய்க்கால்கள் தூா்வாரப்படாததால், கழிவு நீா் சாலையில் ஓடியது. போடிமெட்டு மலைப் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. போடிமெட்டு மலை கிராமத்தில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு மழை பெய்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். போடிமெட்டு வழியாக கேரளம் நோக்கிச் சென்ற வாகன ஓட்டிகளிடம் வாகனங்களை கவனமுடன் இயக்க போடி முந்தல் சோதனை சாவடி போலீஸாா் அறிவுறுத்தினா்.
Advertisement
Advertisement