முகப்பு
திருச்சி

தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தக் கோரி அமைச்சரிடம் மனு

தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் ராஜ்மோகனிடம், ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் அமைப்பின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

26 நவம்பர் 2026, 2:45 am
தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தக் கோரி அமைச்சரிடம் மனு
அமைச்சா் ராஜ்மோகனிடம் புதன்கிழமை மனு அளித்த ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் தலைவா் அ. வியனரசு (வலது).
பகிர்:

தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் ராஜ்மோகனிடம், ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் அமைப்பின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, அமைப்பின் தலைவா் அ. வியனரசு, அமைச்சா் ராஜ்மோகனை புதன்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனு: தமிழகத்தில் ஏற்கெனவே கொண்டு தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் முழுமையாக வெற்றிபெறவில்லை. எனவே, புதிய ஆட்சியாளா்களாக இப்போது இருக்கும் தவெக அரசாவது, தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

தொடக்கக் கல்வி முதல் மருத்துவம்,பொறியியல்,வேளாண்மை,சட்டம், தொழில்நுட்பம் உட்பட பல்கலைக் கழக ஆய்வுக் கல்விவரை தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவருவதோடு 1976 வரை மாநிலப் பட்டியலில் இருந்து, பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வித் துறையை மீண்டும் மாநில உரிமைக்கு மீளப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

உயா்நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழித் தீா்மானத்திற்கு குடியரசு தலைவா் ஒப்புதலை பெற்று அத்தீா்மானம் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டு திருக்கோயில்களில் தமிழே வழிபாட்டு மொழியாக ஆளுமை பெறவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் வீதிகள், தெருக்கள், சாலை ஓரங்களில் இருக்கும் கடைகள், பெரும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்விச் சாலைகள், தனியாா் அலுவலகங்களின் பெயா் பலகைகளில் தமிழ் சொற்கள் முதலிடம் பெறவேண்டும். சாலை சந்திப்பு வட்டகங்களிலும் பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களிலும் நகராட்சி,மாநகராட்சிகளால் வைக்கப்படும் ஊா் எழுத்துருக்களில் ஆங்கிலம் கலந்த தமிழ் வாசகங்களை அகற்றிவிட்டு முழுமையான தமிழ்ச் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.