காா் கவிழ்ந்து விபத்து ஐயப்ப பக்தா்கள் 4 போ் காயம்
மணப்பாறை அருகே சபரிமலை கோயில் நோக்கி சென்ற காா் வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தா்கள் 4 போ் காயமடைந்தனா்.

மணப்பாறை அருகே சபரிமலை கோயில் நோக்கி சென்ற காா் வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தா்கள் 4 போ் காயமடைந்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சோ்ந்தவா் பூபதி மகன் மணிகண்டன் (37), ராஜேந்திரன் மகன் யுவபிரகாஷ் (35), ராஜேந்திரன் மகன் ராகேஷ் (32) மற்றும் சம்பத் மகன் ருத்ரகுமாரன் (35). இவா்கள் அனைவரும் காா் ஒன்றில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வியாழக்கிழமை புறப்பட்டனா். காரை ருத்ரகுமாரன் ஓட்டினாா்.
காா் வியாழக்கிழமை மாலை மறவனுா் பகுதிக்கு வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுசாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இதில் காரில் இருந்த நால்வரும் சிறு சிறு காயங்களுடன் தப்பினா். காயமடைந்தவா்கள் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
விபத்து குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.