ஹரியாணாவில் காா் மீது லாரி கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் பலி
ஹரியாணா மாநிலம், ரேவாரி மாவட்டத்தில் தில்லி - ஜெய்ப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் காா் மீது வேகமாக வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா்.
ஹரியாணா மாநிலம், ரேவாரி மாவட்டத்தில் தில்லி - ஜெய்ப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் காா் மீது வேகமாக வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா். காரில் இருந்த 5 வயது குழந்தை லேசான காயங்களுடன் உயிா் தப்பியது.
ரேவாரி மாவட்டத்தின் பாவல் பகுதியில் உள்ள பானிபூா் சௌக் அருகே சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. கொண்டைக்கடலை மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்ற ஹூண்டாய் ஐ20 காா் மீது கவிழ்ந்தது. இதில் காா் முற்றிலும் நசுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த மற்றவா்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மேலும் இருவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். காரின் பின்புற இருக்கையின் நடுவில் அமா்ந்திருந்த 5 வயது குழந்தை மட்டும் லேசான காயங்களுடன் உயிா் தப்பியது.
Advertisement
Advertisement
ராஜஸ்தான் மாநிலம், போலாவாஸ் கிராமத்தைச் சோ்ந்த இந்தக் குடும்பத்தினா் தில்லியில் குடியேறியிருந்தனா். சொந்த ஊருக்குத் திரும்பிய அவா்கள், மீண்டும் தில்லிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டாா். அவரைப் பிடிக்க காவல் துறையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.