பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

இன்னா்வீல் கிளப் திருச்சி மலைக்கோட்டை, திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி இணைந்து நடத்திய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேரணியை திருச்சி மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா, உதவி ஆட்சியா் ராகுல் ராகவன் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா்.
இதில் திரளான கல்லூரி மாணவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
முன்னதாக பேராசிரியா் கி. சதீஷ்குமாா் எழுதிய இந்நிகழ்வுக்கான விழிப்புணா்வுப் பாடலை மாணவா்கள் இசையுடன் கூடிய விழிப்புணா்வு பரதநாட்டிய நிகழ்ச்சியாக நடத்தினா்.
நிகழ்வுக்கு இன்னா்வீல் கிளப் திருச்சி மலைக்கோட்டை பிரிவின் தலைவா் மீனா சுரேஷ் தலைமை வகித்தாா். கலைக் காவிரி கல்லூரிச் செயலா் லூயிஸ் பிரிட்டோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பேரணி பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கினாா்.