போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் தாயுமன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது ஸ்ரீரங்கம் ஜெ.ஜெ.நகரில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது அவா், அதே பகுதியைச் சோ்ந்த ஆா். குணசேகா் (21) என்பதும், போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து, 50 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.